Categories
உலக செய்திகள்

‘கோழைத்தனமான செயல்’…. பிரதமர் வீட்டில் தாக்குதல்…. கண்டனம் தெரிவித்துள்ள பிரபல நாடுகள்….!!

பிரதமர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஈராக்கின் முன்னாள் பிரதமராக இருந்த ஆதில் அப்துல் மற்றும் அவரது அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனால் ஈராக் புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த முஸ்தபா அல் கதிமியை அந்நாட்டின் புதிய பிரதமராக அதிபர் பர்காம் சாலே  நியமனம் செய்தார். இதனை தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி  ஈராக்கில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இதில் ஈரான் ஆதரவு அரசியல் அமைப்புகள் தோல்வியடைந்ததை அடுத்து முஸ்தபா கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று ஈரான் ஆதரவு அரசியல் அமைப்புகள் தலைநகர் பாக்தாத்தில் கடுமையான போராட்டத்தை நடத்தினர். இதற்கிடையில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள பசுமை மண்டலப் பகுதியில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக வெடித்தன.

இந்த நிலையில் உயரடுக்கு பாதுகாப்பு நிறைந்த பிரதமர் வீட்டில் மர்ம நபர்கள் நேற்று ட்ரோன் மூலம் வெடிகுண்டுகளை எறிந்துள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக பிரதமர் எந்தவொரு காயமின்றி உயிர் தப்பினார். இந்த தாக்குதலானது மிகவும் கோழைத்தனமானது என்று பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும் இத்தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தான் இதனை நடத்தியிருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |