இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருகை…. பின்பு வேலை வாய்ப்பு மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்றவற்றை முடிவுச்செய்ய பயணம் மேற்கொள்கிறார் …
இங்கிலாந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்குப் பின்பு, போரிஸ் ஜான்சன் மேற்கொள்ள இருக்கும் பயணம் இந்தியா செல்வதாகும். இந்தப் பயணம் வருவதற்கு முக்கியமான காரணம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்பான உறவுகளை உறுதிப்படுத்தவும், குறிப்பாக வேலைவாய்ப்பினை அதிகரித்தல், முதலீடுகளை எடுத்தல் போன்ற பேச்சுவார்த்தைகளை இந்த சந்திப்பில் முடிவு செய்ய வருகிறார் என்பது தெரியவருகிறது.
இதற்கு முன்பு குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வருவதாக இருந்தார். அப்போது, இங்கிலாந்தில் கொரோனா தோற்று மிகுந்த அளவில் இருந்த காரணத்தினால் அந்த பயணம் நின்றுவிட்டது. அதற்குப் பின்பு போரிஸ் ஜான்சன் முதன் முறையாக இந்தியா வருவதாக கூறியுள்ளார்.