இங்கிலாந்து நாட்டின் பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். பிரதமர் பதவியேற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, “இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக்குடன் பேசியதில் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் இரு நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்த ஒன்றாக இணைந்து செயல்படுவோம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடியின் பதிவுக்கு, இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக் பதிலளித்ததாவது, “அவர் தமது பதிவில், புதிய பொறுப்பில் பயணத்தை தொடங்கும் போது பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என கூறியுள்ளார். மேலும், அடுத்த வர உள்ள மாதங்களில் அல்லது ஆண்டுகளில், இரு பெரிய ஜனநாயக நாடுகளான இங்கிலாந்தும் இந்தியாவும் எதை இலக்காக அடையலாம் என எதிர்ப்பார்த்திருப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.