Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ…!!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் கடந்த ஆண்டு உருவாகி படிப்படியாக உலக நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் கணக்கிட முடியாத அளவிற்கு உயிரிழப்புகளையும் மற்றும் பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியது. மேலும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல  நாடுகளில் உள்ள மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து ஜமைக்கா நாட்டிற்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டது. அஸ்ட்ராஜெனகாவின் கோவிஷீல்டு  வாக்சினின்  சுமார் 50000 டோஸ்கள் ஜமைக்கா நாட்டிற்கு இந்தியா வழங்கியுள்ளது இதற்காக அந்நாட்டின் பிரதமர் ஆண்ட்ரூ ஹால்னெஸ்  மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜமைக்கா நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆந்த்ரே ரசல் இந்திய நாட்டிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய தூதருக்கும் மிகுந்த நன்றி என்றும் ஜமைக்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதால் நாங்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளோம் என்றும்  வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசியின் மூலம் உலக நாடுகள் அனைத்தும் பழைய நிலைமைக்கு திரும்ப வழிவகுத்திருக்கிறது அதனை ஜமைக்கா மக்களும் வரவேற்கிறார்கள் . இந்தியா மற்றும் ஜமைக்கா நாட்டின் நெருக்கமானது மேலும்  தொடர வேண்டும் என்றும்  நம் இரு நாடுகளும் சகோதரத்துடன் /செயல்பட வேண்டும் என்றும்  பெரும் மகிழ்ச்சியுடன் ரசல் கூறியுள்ளார்.

Categories

Tech |