Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“2 மணிநேரம் தாமதம்” குழந்தை- தாய் மரணம்…. கோட்டாட்சியர் விசாரணை….!!

பிரசவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையுடன் தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு அருகில் இருக்கும் திருவடுத்தனூர் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசினா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அசினா பிரசவத்திற்காக மூங்கில்துறைப்பட்டில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அசினாவை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். இதில் அசினாவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதினால் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தாய் மற்றும் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை அறிந்த அசினாவின் உறவினர்கள் தாய்-குழந்தை இருவரின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட அசினாவின் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததாகவும், அதனால் தான் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசினாவுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்ற காரணத்தினால் கோட்டாட்சியர் சரவணன் இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |