Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம்”…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணத்தில் இருவரின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். “சிந்து சமவெளி”  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்தாலும் “பியார் பிரேமா காதல்”  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தாராள பிரபு, இஸ்பேட்ட ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது டீசல் உள்ளிட்ட இரண்டு, மூன்று படங்களில்  நடிக்கின்றார்.

கடந்த ஆயுத பூஜை தினத்தில் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் அறிமுகப்படுத்தினார். சென்னையில் பிறந்த நர்மதா தற்போது ஸ்டார்ட்-அப் தொழில் செய்து வருகின்றார். இவர்களுக்கு திருமணம்  பெற்றோர்களால் பார்த்து முடிவு செய்து இன்று அக்டோபர் 28) சென்னையில் ஜிபிஎன் பேலஸில் இந்து முறைப்படி இனிதே நடந்தது.

இந்த திருமணத்தின் போது மணமகன் ஹரிஷ் கல்யாண் பட்டு வேஷ்டி சட்டையும், மணமகள் நர்மதா சிவப்பு நிற பட்டுப்புடவையும் அணிந்து இருந்தனர். இவர்கள் புதுவாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் அணிந்து இருந்தனர். மேலும் புதுவாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |