Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு தாத்தாவாக நடிக்கும் நெப்போலியன்… வெளியான தகவல்கள்…!!!

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் அவருக்கு தாத்தாவாக நடிகர் நெப்போலியன் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி ‌. இவர் நடிப்பில் தற்போது ‘அன்பறிவு’ திரைப்படம் தயாராகி வருகிறது . அஸ்வின் ராம் இயக்கும் இந்தப் படத்தில்  காஷ்மிரா பர்தேசி , விதார்த், சங்கீதா ,சாய்குமார் ,தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

அன்பறிவு படக்குழு

இந்த படத்தை விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . இந்நிலையில் இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தாத்தாவாக பிரபல நடிகர் நெப்போலியன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |