Categories
உலக செய்திகள்

நடுவானில் மயங்கிய விமானி…. விமானத்தை இயக்கி சென்ற பயணி… அமெரிக்காவில் பரபரப்பு…!!!

நடுவானத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், விமானி மயக்கமடைந்ததால் பயணி ஒருவர் விமானத்தை இயக்கி பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் பஹாமா என்ற தீவு நாட்டிலிருந்து பயணிகள் இருவருடன் சிறிய வகை விமானம் சென்றிருக்கிறது. ப்ளோரிடா நோக்கி பயணித்த அந்த விமானத்தின், விமானிக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி விட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த பயணி ஒருவர், விமானி அறைக்கு சென்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்த நபர், அந்த பயணிக்கு எப்படி விமானத்தை இயக்க வேண்டும் என்று வழிமுறைகளை கூறியுள்ளார். அதன்படி அந்த பயணி எந்தவித பதற்றமும் இல்லாமல் விமானத்தை இயக்கி பாதுகாப்பாக தரையிறக்கி விட்டார். அந்த பயணிக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. அந்த பயணி கர்பமாக  இருக்கும் தன் மனைவியை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார்.

Categories

Tech |