புகைப்படங்களை பகிரும் சமூகவலைத்தளமான பின்டிரஸ்ட்(pinterest) நிறுவனம் இ-காமர்ஸ் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக பயனர்கள் நேரடியாக பின்டிரஸ்ட் செயலியில் ஷாப்பிங் செய்து பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் முதலில் இந்த சேவை பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட இருக்கிறது.
இந்த புதிய சேவையில் பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய வகையில் ஷாப்பிங் பக்கங்களை தேர்வு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிப்பாளர்கள், பிராண்டுகள் பரிந்துரைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொருட்களை விற்பனை செய்பவர்களும் எளிதாக பொருட்களின் பட்டியலை உருவாக்கி விலைமாற்றங்களை செய்ய முடியும் என்று பின்டிரஸ்ட்(pinterest) நிறுவனம் கூறியுள்ளது.