பின்லாந்து நாட்டின் பிரதமர் சமீபத்தில் தன்னை சுற்றி நடந்த பிரச்சனைகள் குறித்து விளக்கம் தெரிவித்திருக்கிறார்.
பின்லாந்து நாட்டினுடைய பிரதமரா ன சன்னா மரின், உலகிலேயே இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் இவரை பற்றி எழுத சர்ச்சைகள் குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த வாரத்தில் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிகழ்வுகளை அனுபவித்தேன். நானும் ஒரு சாதாரண பெண் தான் என்று கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே இவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இவரின் தோழி மற்றும் மாடலாக இருக்கும் Sabina Särkkä என்பவர் மேலாடை இல்லாமல் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
பிரதமர் அலுவலகத்தில் விருந்து நடந்த சமயத்தில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். மேலும், பிரதமர் ஒரு இரவு விடுதியில் நண்பர்களோடு சேர்ந்து நடனமாடிய வீடியோ வெளியானது. இதனால், சர்ச்சைகள் கிளம்பியது.
எனவே, தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்தது எப்படி வெளிஉலகிற்கு தெரிய வந்தது? என்பது குறித்து கூறும் போது பிரதமர் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். நான் என் பணியை பார்க்க வேண்டும். இந்த சம்பவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.