மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மூனாண்டிபட்டி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் யாகப்பா பகுதியில் வசிக்கும் வேறு ஜாதி பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் அக்காள் மகள் பாட்டி வீட்டில் தங்கி பிளஸ் டூ படித்து வந்திருக்கிறார்.
அதன்பின் இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்த மாணவி சித்தி வீட்டுக்கு வந்த போது ஜெகதீசன் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளியில் செல்லாமல் இருப்பதற்காக குடும்ப சூழ்நிலையை சுட்டிக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் பயந்த மாணவி இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
அதனால் இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திய ஜெகதீசன் இரண்டு வருடங்களாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி இது சம்பந்தமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜெகதீசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.