Categories
தேசிய செய்திகள்

பீகாரில் பெய்து வரும் கனமழை… வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலி…!!!

பீகாரில் பெய்து கொண்டிருக்கும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அதனால் மாநிலத்தில் பல்வேறு முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசித்து வரும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. சாலைப் போக்குவரத்தை முழுவதுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பீகாரில் பெய்து கொண்டிருக்கும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 16 மாவட்டங்களை சேர்ந்த 75 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தகவல் அளித்துள்ளனர். இந்தநிலையில் பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |