Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆட்டம் புடிச்சா ஓரமா நின்னு பாரு, இல்லனா போய்கிட்டே இரு”…. போலீஸ் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட பெண்…. பரபரப்பு….!!!!

போலீஸ் நிலையத்தின் முன் இளம்பெண் குத்தாட்டம் போட்டது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஜலகண்டாபுரம் சாலையிலுள்ள எடப்பாடி காவல் நிலையத்துக்கு ஒரு இளம்பெண் வந்தார். இந்நிலையில் அங்கு ஏற்கனவே புகார் அளிக்க வந்தவர்களுடன் அந்த பெண் சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அப்போது புகார் அளிக்க வந்தவர்களிடம் விசாரணை செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதன் காரணமாக பொறுமையை இழந்த அந்த பெண் திடீரென்று காவல் நிலைய முன் குத்தாட்டம் போட்டு நடனமாட தொடங்கினார். இதனால் காவல்துறையினர் மற்றும் அங்கு புகார் அளிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையில் ஒரு சிலர் அந்த பெண்ணிடம் சென்று  இங்கு நடனமாட கூடாது என்று அறிவுறுத்தினர். அதற்கு அந்த பெண் ஆட்டம் பிடித்தால் ஒரு ஓரமாக நின்று பாருங்கள் இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள் என அவர்களிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து 2 மணி நேரத்திற்கு மேலாக திரைப்படத்தில் வரும் பல்வேறு பாடல்களைப் பாடியபடி அந்த பெண் காவல் நிலையம் முன்பு குத்தாட்டம் போட்டார். அதன்பின் ஆடி களைத்த பின் அவர் அங்கிருந்து புறப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது “அந்த பெண் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் அடிக்கடி பிரச்சினை என கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருவார். அப்போது அவரது பொய்யான புகாரை ஏற்காதபட்சத்தில் அந்தப் பெண் இவ்வாறு குத்தாட்டம் போட்டு காவல் நிலையம் வாசலில் பரபரப்பை ஏற்படுத்துவார்” என்று கூறினர்.

Categories

Tech |