Categories
உலக செய்திகள்

இப்படி தான் பரவியதா?…. 1,500 வைரஸ்களை மறைத்த சீனா… வைரலான போட்டோவால் அதிர்ச்சி!

வூஹான் நகரின்  பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வைரஸ்களின் மாதிரிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் ஒரு சந்தையில் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவ தொடங்கியதாகவும், வௌவால் மூலம் தான் இது பரவியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால்  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டே வருகிறது..

இந்த நிலையில், வூஹானின் ரகசிய இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வு கூடத்தில் குளிர்சாதன பெட்டிகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வெவ்வேறு வைரஸ்களை வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

2018 ஆம் ஆண்டில் அரசுக்கு சொந்தமான சீனா டெய்லி செய்தித்தாள் முதலில் இந்த புகைப்படங்களை வெளியிட்டது. இந்த நிலையில் அந்த புகைப்படங்கள் கடந்த மார்ச் மாதம் அதன் அதிகார்வ பூர்வ டுவிட்டரில் வெளியாகி, பின்னர் அழிக்கப்பட்டது. ஆனால் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஒரு குளிர்சாதன பெட்டியின் கதவு உடைந்த நிலையில் இருக்கின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் வௌவாலில் இருந்துதான் பரவியது என்று சொல்லப்பட்டது. ஆனால் அமெரிக்கா  சீனா ஆய்வகத்தில் இருந்தே இந்த வைரஸ் கசிந்தது என குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இதில் வௌவால் கொரோனா வைரசின் மாதிரிகள் இருந்துள்ளது. குளிர்சாதன பெட்டியில் கதவுகள் உடைந்து இருந்த நிலையில், அதன் மூலம் பரவி இருக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர்.

மேலும் பலர் கூறுகையில் இதைவிட நல்ல நிலையில் எங்கள் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் இருக்கின்றன. ஆனால் இந்த ஆபத்தான வைரஸ் மாதிரிகளை இப்படியா வைப்பது என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வுத்துறை கூறுகையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆய்வகத்தின் அதிகாரிகள் வைரசின் மாதிரிகளை அழித்தனர்.  ஆரம்ப அறிக்கைகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கல்வித்தாளையும் அழித்துவிட்டனர். பின்னர் வூஹான் சந்தையில் இருக்கும் விலங்குகள் மூலம் கொரோனா பரவியதாக குற்றம் சாட்ட முயன்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் அரசு வட்டாரங்கள் கூறுகையில், வைரஸ் ஒரு விலங்கிலிருந்து தோன்றியது என சான்றுகள் கூறுகின்றன. அதேசமயம் இது ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் கவனக்குறைவு மற்றும் விபத்து ஏற்பட்டதன் காரணமாக மனிதர்களுக்கு முதன்முதலில் பரவி இருக்கலாம் என்ற கோட்பாட்டுடன் இன்னும் ஒத்துப் போகிறது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |