மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகைக்கான ஆணையை நெல்லை ஆட்சியர் மாணவருக்கு வழங்கினார்
வருவாய்த்துறை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மாற்றுத்திறனாளி மகன் விஜய். வேலை செய்ய முடியாத நிலையில் விஜய் இருப்பதால் அவரது வாழ்க்கை நடைமுறைகளுக்கும், படிப்பிற்கும் வழி செய்யும் விதமாக மாதம்தோறும் ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியின்போது சேரன்மகாதேவி வட்டாட்சியர் பிரபாகரன் செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர்.