நிவர் புயலின் பாதிப்புகள் குறித்து அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அதி தீவிர புயலாக உருமாறிய நிவர் புயலால் பல பகுதிகளில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே போல், தொடர் கனமழை பெய்து வருவதால், சாலைகளில் நீர் வெள்ளப்பெருக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில்,
இந்த புயல் காரணமாக, காற்று பலமாக வீசியதால், தற்போது வரை 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பல பகுதிகளில் பொதுமக்கள் செல்போன் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் புயல் கரையை கடந்த பின்பும் 6 மணி நேரம் வரை பாதிப்பு இருக்கும் என்பதால், இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்கள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளதாகவும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சென்னை எழிலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.