பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்ரேட் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், பத்திரிகையாளர்களை சந்தித்து தன் முடிவை அறிவித்துள்ளார். அதாவது, அந்நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதியாக ஒரு நபர் ஒரு முறை மட்டும் தான் பதவியில் இருக்க முடியும். அதாவது ஆறு வருடங்கள் கடந்து பதவியில் இருக்க முடியாது.
எனவே, அவர் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தகுதி இல்லை. எனவே அவர் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அடுத்த வருட அதிபர் தேர்தலில், ரோட்ரிகோ டுட்ரேட்வின் மகள் Sara Duterte-Carpio-களமிறங்குவார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஆனால், Sara Duterte-Carpio, அடுத்த வருடம் நடக்கவுள்ள தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஏனெனில், இரண்டு பேரில் ஒருவர் தான், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தந்தையுடன் சேர்ந்து ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். எனினும், Sara Duterte-Carpio தேர்தலில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.