Categories
சினிமா தமிழ் சினிமா

இவர்களுக்கும் பால்கே விருது கொடுக்கலாம்…. ஒன்றிய அரசின் கண்களுக்கு காட்டுவோம்…. வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு….!!

கமல், பாரதிராஜா போன்ற தகுதிமிக்க கலைஞர்களுக்கும் பால்கே விருது வழங்க வேண்டும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த திங்கட்கிழமை தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார். ரஜினி திரையுலகில் நிகழ்த்திய வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் ட்விட்டர் பதிவில், ”கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |