நார்வேயில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 23 முதியவர்கள் சில மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது அதற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அதில் நார்வேயில் Pfizer-BioNTech தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்ட 23 முதியவர்கள் சில மணி நேரத்திலேயே இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பலர் நோயுற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தடுப்பூசி க்கும் மரணத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என்பது உறுதியாகவில்லை. இதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி நம் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.