பிஎப் வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது பிஎப் சந்தாதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா காரணமாக சிறப்பு வசதியின் மூலம் பிஎஃப் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிகமான வாடிக்கையாளர்கள் பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த காலகட்டத்தில் பிஎப் பங்களிப்பு தொகை குறைந்தது. இதனால் வட்டி விகிதத்தை குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிஎப் வட்டி குறைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ள இந்த செய்தி 6 கோடிக்கும் மேற்பட்ட பிஎஃப் சந்தாதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013-ம் நிதியாண்டில் பிஎஃப் வட்டி விகிதம் 8.5% இருந்தது. இதையடுத்து 2019 நிதியாண்டில் 8.5% வட்டி கிடைத்தது. 2020 நிதியாண்டில் KYC தாமதம் காரணமாக பிஎப் கிடைப்பதில் தாமதமானது. இதனால் 16 கோடிக்கு மேற்பட்ட பிஎஃப் சந்தாதாரர்கள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் வட்டி குறைக்கப்படும் என்று செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோன வந்த பிறகு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சமயத்தில் வட்டியை குறைத்தால் மேலும் நெருக்கடி ஏற்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.