ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தனது உறுப்பினர்கள் வீட்டிலிருந்தபடியே EPF இருப்பை சரிபார்க்க முடியும் என்று அறிவித்து இருப்பதோடு அதற்குரிய 4 எளிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம், அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்புநிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இது ஊழியர்களின் அக்கவுண்டில் சேர்க்கப்படும். இத்தொகையை ஊழியர்கள் தங்கள் பணி ஓய்வு நிலையில் அல்லது அதற்கு முன்னதாக கூட தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். தற்போது ஊழியர்களின் PF கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொள்வதற்கு பல்வேறு வழிகள் இருக்கிறது.
இதன் மூலமாக ஊழியர்கள் தங்கள் கானகத்தில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் அவர்களின் வீட்டில் இருந்தவாறு EPF இருப்பை சரிபார்க்க முடியும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து EPFO சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி இருப்பை சரிபார்க்க உதவும் வழிமுறைகளாவன,
1. எஸ்எம்எஸ் முறை:
ஒரு எஸ்எம்எஸ் மூலம் வீட்டிலிருந்தே EPF கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம். எஸ்எம்எஸ் மூலம் EPF இருப்பை சரிபார்க்க, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7738299899-க்கு “EPFOPHO UAN LAN “-ஐ அனுப்ப வேண்டும்.
2. மிஸ்டுகால் முறை:
மிஸ்டுகால் மூலமாக உங்களது கணக்கிலுள்ள தொகையை அறிந்துகொள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
3. இணையதளம்:
epfindia.gov.in இல் உள்ள EPFO-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து ஒருவர் தனது EPF இருப்பை சரி பார்க்கலாம். EPFO இணையதளத்திலிருந்து இந்த சேவையை பெற ஒருவர் EPF பாஸ்புக் போர்ட்டலுக்கு சென்று UAN கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். இந்நிலையில் ஒருவர் பதிவிறக்கம் அல்லது பாஸ்புக் பார்த்தல் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் EPF இருப்பை சரி பார்க்கலாம்.
4. UMANG ஆப்:
UMANG பயன்பாட்டின் மூலமாக இந்த சேவையை பெற ஒருவர் EPFO-க்கு சென்று “பணியாளர் மைய சேவைகள்” என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் ஒருவர் “பாஸ்புக்கை காண்க” என்பதை தேர்ந்தெடுத்து பாஸ்புக்கை பார்க்க UAN உடன் உள்நுழைய வேண்டும். இது தொடர்பான விவரங்கள் மற்றும் கேள்விகள் ஏதேனும் இருந்தால் EPFO உறுப்பினர்கள் EPFO-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in-ல் சென்று தெரிந்து கொள்ளலாம்.