ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு பென்ஷன் தாராருக்கும் ஒரு தனிப்பட்ட ஓய்வுதிய கொடுப்பனவு ஆணை என் ஒதுக்கப்பட்டுள்ளது , ஒவ்வொரு PPO எண்ணின் முதல் ஐந்து இலக்கங்களும் PPO வழங்கும் ஆணையத்தின் குறியீட்டு எண்ணைக் குறிக்கின்றன. பின்வரும் இரண்டு இலக்கங்கள் வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கின்றன. அடுத்த நான்கு இலக்கங்கள் PPO இன் வரிசை எண்ணைக் குறிக்கின்றன. கடைசி இலக்கம் கணினி சரிபார்ப்பு இலக்கமாகும். உதாரணமாக 709650601302 என்ற எண்ணைக் கொண்ட ஒரு PPO, 2006 இல் AG மத்தியப் பிரதேசத்தால் வழங்கப்பட்டதைக் குறிக்கிறது.
இது அந்த PPO ஆல் வழங்கப்பட்ட 130 வது PPO ஆகும். உங்கள் PPO எண்னை கண்டுபிடிக்க எளிய வழிமுறைகள் பின்வருமாறு: அதற்கு முதலில் www.epfindia.gov.in என்ற இணைய முகவரிகள் நுழையவும். இதனையடுத்து இடதுபுறத்தில் ஆன்லைன் சேவையின் கீழ், பென்ஷனர் போர்ட்டல் என்பதை கிளிக் செய்யவும். பின்னர் ஓய்வூதியம் பெறுவோர் போர்ட்டலுக்கு வரவேற்கிறோம் என்ற பக்கத்திற்கு சென்று இடது புறத்தில் உள்ள PPO எண்ணை அறிந்து கொள்ளுங்கள்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
அடுத்ததாக உங்கள் வங்கி கணக்கு எண் அல்லது PF எண்ணை அதில் பதிவிடவும். தொடர்புடைய தகவலை கொடுத்த பிறகு, உங்கள் பிபிஓ எண்ணையும், உறுப்பினர் ஐடி மற்றும் ஓய்வூதிய வகை என்ன என்பது தெரியவரும்.