இபிஎப்ஓ ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பிஎஃப் பலன்களை பெறுபவர்களுக்கு இபிஎப்ஓ ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக நாமினிகளை இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் நாமினிகளை இணைக்காவிட்டால் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற்கான பலன்களை பெற முடியாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பிஎஃப் கணக்குடன் நாமினிகளை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். நீங்கள் முதலில் இபிஎஃப்ஓ வின் அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அதன்பின் சேவை என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து UAN இணையதள சேவை (OCS/OTP) என்பதை கிளிக் செய்து UAN மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு Manage tap என்பதற்கு கீழே இருக்கும் E Nomination என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து குடும்ப அறிவிப்பை புதுப்பிக்க ஆம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து விட்டு, வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை எண், புகைப்படம் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின் நாமினேஷன் விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து save இபிஎஃப் நியமனம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். மேலும் இறுதியில் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு ஓடிபி நம்பர் வரும். அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்து விட்டால் நாமினிகளை இணைத்துவிடலாம்.