Categories
தேசிய செய்திகள்

PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு….ஏப்ரல் 1 முதல்….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பிஎஃப் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான புதிய விதிகளை மத்திய அமைச்சர் தற்போது வெளியிட்டுள்ளார்.

வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் ஒரு ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும். இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ள ஒவ்வொரு நபரும் 60 ஆண்டுகள் கழித்து,ஓய்வு பெற்றபின் அல்லது அதற்கு முன்பாகவும் சேமிப்பு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

அவ்வாறு ஓய்வுபெறும் முன் EPF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், பிஎஃப் கணக்கு எடுப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை  பின்பற்ற வேண்டியது அவசியம். அந்த வகையில் பட்ஜெட் 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, EPF மீதான வட்டியானது முற்றிலுமாக வரி இல்லாததாக இருந்துள்ளது.

ஆனால் 2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளவாறு, ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பிஎஃப் பங்களிப்புகளுக்கு வரி விதிக்கப்படும். இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஊழியரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பிற்கான வட்டிக்கு எவ்வாறு வரி விதிக்கப்படும் என்பது தொடர்பான புதிய விதிகளை அறிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஊழியர் ஒருவரின் வருங்கால வைப்பு நிதியில் (EPF) ஆண்டுக்கு ₹2.5 லட்சத்துக்கும் அதிகமான பங்களிப்புகளுக்கு வரி விதிக்கப்பட உள்ளது. ஆனால் இப்போது மார்ச் 31, 2021 நிலவரப்படி, வரி விதிக்கப்படாத கணக்குகளுக்கான வட்டி தொடர்ந்து வரி இல்லாததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதன் படி புதிய PF விதிகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  •  தற்போதுள்ள பிஎஃப் கணக்குகள் வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத பங்களிப்பு கணக்குகளாக பிரிக்கப்படும்.
  • இதில் வரி விதிக்கப்படாத கணக்குகள் அவற்றின் இறுதிக் கணக்கையும் உள்ளடக்கும்.
  • புதிய பிஎஃப் விதிகள் அடுத்த நிதியாண்டிலிருந்து, அதாவது ஏப்ரல் 1, 2022 முதல் அமல்படுத்தப்படலாம்.
  • ஐடி விதிகளின் கீழ் ஒரு புதிய பிரிவு 9D இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் ஊழியர்களின் பங்களிப்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் ஆக இருக்கும்.
  • தற்போதுள்ள பிஎஃப் கணக்கில் வரி விதிக்கக்கூடிய வட்டியை கணக்கிடுவதற்கு இரண்டு தனித்தனி கணக்குகளும் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |