இத்தாலியில் பெற்றோரை கொன்ற மகன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
இத்தாலியில் போல்சானோ நகரில் பென்னோ என்ற நபர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவரது தாயார் லாரா பெர்செல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பென்னோவை அவரது தந்தை பீட்டர் எழுப்பியுள்ளார். எழுப்பிய பின்பு அவர் பென்னோவிடம் பணம் தொடர்பாக சண்டையிட்டுள்ளார்.
மேலும் சண்டையில் பென்னோ -வை சகோதரியுடன் ஒப்பிட்டு பேசியது மட்டுமல்லாமல் கேலியும் செய்துள்ளார். சகோதரி அதிகமாக சம்பாதிப்பதால் குடும்பத்தினர் தன்னை தனிமைப்படுத்துவதாக உணர்ந்த பென்னோ மலையேற பயன்படுத்தும் கயிறால் பீட்டரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
மேலும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்பு தனது தாயையும் அதே கயிறால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதற்கு பின்பு இருவரது மொபைல் போன்களையும் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். அந்த போன் காவல்துறையினருக்கு கிடைத்ததன் மூலம் விசாரணை மேற்கொண்டதில் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக பென்னோ வாக்குமூலம் கொடுத்துள்ளார்.