இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பால், உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்க முடியாத மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நம் அனைவராலும் மறக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்நிலையில் அந்நாட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் என அந்நாட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 92 ரகம் பெட்ரோலின் விலை 450 லிருந்து 410 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 95 ரக பெட்ரோலின் விலை 540 திலிருந்து 510 ஆக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற எரிபொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இலங்கை மக்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.