கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கல்லடிமாமூடு பகுதியில் பெட்ரோல் பங்கு ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை பெட்ரோல் போடுவதற்கு பைக், கார் மற்றும் ஆட்டோ ஆகிய ஏராளமான வாகனங்கள் வந்தது. பெட்ரோல் போட்ட வாகனங்களில் சிறிது நேரம் கழித்து இன்ஜின் பழுதாகி நின்றது. இதனால் சிலர் தங்கள் வாகனங்களைத் தள்ளி சென்றனர். மேலும் சிலர் இன்ஜினில் பிரச்சினை என்ற சந்தேகத்தால் மெக்கானிக்யிடம் சென்று சோதனை நடத்தியபோது பெற்று உள்ளே தண்ணீர் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் அந்த பங்க் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோலை வாங்கி பார்த்தபோது அதில் பாதி பெட்ரோல் மீதி தண்ணீரும் கலந்திருந்தது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பல்வேறு வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர். இதையடுத்து பெட்ரோல் பங்க் டேங்கியில் ஏற்பட்ட ஓட்டையில் மழைநீர் தண்ணீர் புகுந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் பெட்ரோல் விற்பனை நிறுத்தபட்டு வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.