இலங்கை அரசு அத்தியாவசிய பணி இல்லாதவர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், பெட்ரோல், டீசல் பற்றாக்குறையும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்யுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது.