Categories
மாநில செய்திகள்

#BREAKING: BJP ஆபீஸ் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு – தே.பா.சட்டத்தில் நடவடிக்கை… தமிழக போலீஸ் அதிரடி ..!!

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர் யாராக இருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிக்கையாக வெளியிட்டு,  எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் குறிப்பாக இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பாஜக அலுவலகம் மற்றும் பாஜக பிரமுகர்கள் வீடுகள் தாக்கப்பட்டது. குறிப்பாக பெட்ரோல் கொண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டது.

இது போன்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைவர் குறிப்பிட்டிருந்தார். போலீசாரும் குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அதன் பிறகு தொடர்ச்சியாக பலரும் கைது செய்யப்பட்டனர். தற்பொழுது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Categories

Tech |