Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெட்ரோல் குண்டு வீச்சு – சேலத்தில் 7பேரிடம் விசாரணை…!!

சேலம் மாவட்ட மாநகர் அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும்  ஆர் எஸ் எஸ் பிரமுகர் ராஜன் இல்லத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டானது வீசப்பட்டது. இது தொடர்பாக சேலம் மாநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,  இந்த சம்பவம் தொடர்பாக முகமது இஸ்மாயில், முஹம்மது ஹரிஷ், நாதர் உசேன், பாஷா முகமது, ரஃபி க்,  உஹசேன் உள்ளிட்ட ஏழு நபர்களைப் பிடித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அம்மாபேட்டை காவல் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருந்தாலும் கூட விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர்கள் குறித்து தகவல் அறிந்த சக இஸ்லாமியர்கள் அந்த பகுதியில் கூட தொடங்கி இருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவே இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வருவதாகவும், தற்பொழுது ஏழு நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும்,  விசாரணையில் உண்மை இருக்கும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |