Categories
பல்சுவை

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு”… வாகன ஓட்டிகள் கவலை.!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

Image result for Petrol and diesel price hike ...
விலை நிர்ணயம் :

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன.

Related image

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 08 காசுகள் அதிகரித்து  77 ரூபாய் 36 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து  71 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |