வரக்கூடிய ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனுடைய விலையை கணக்கிடுகையில், மக்களும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இந்நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி,
வருகிற ஆண்டுகளில் 5 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள், 55 ஆயிரம் மின்சார நான்கு சக்கர கார்கள், 10 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள், 7000 மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்ய மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மத்திய பிரதேசம், தமிழகம், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 241 மின் சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது.