புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி கடந்த 2010ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் தொடர்பாக எந்த பணியும் தொடங்கவில்லை என்றும்,
உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகள் தொடங்கப்படும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் பொழுது மனுதாரர்கள் அதனை எதிர்த்து வழக்குத் தொடரலாம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.