Categories
அரசியல்

முதலமைச்சர் அவர்களே…! சபாஷ்! 7.5 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால்…. பீட்டர் அல்போன்ஸ்…!!!

சென்னையில் நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பிற்கு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவரான பீட்டர் அல்போன்ஸ் வரவேற்பு அளித்துள்ளார்.

டெல்லியில் நடக்கவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க கோரி, தமிழக அரசு சார்பாக பாரதியார், வேலு நாச்சியார் மற்றும் வ.உ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் கொண்ட ஊர்திகள் காண்பிக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு அதனை நிராகரித்தது. இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்த்து வருகிறார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராஜ்நாத் சிங்கின் கடிதம் தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, குடியரசு தின விழாவின் அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுத் துறை சார்பில் நடக்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு, இந்த வருடம் ‘இந்தியா 75’ என்னும் தலைப்பில் நடக்க இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பைப் பறை சாற்ற, அலங்கார ஊர்தியின் வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவிற்கு  சமர்ப்பிக்கப்பட்டு, மூன்று தடவை அவர்கள் தெரிவித்தபடி திருத்தங்கள் செய்திருக்கிறோம்.

நான்காம் கூட்டத்திற்கு எந்தவித காரணமும் இல்லாமல், அழைக்காமல் இருந்ததோடு, அது தொடர்பில் எந்த தகவல்களையும் தெரிவிக்காமல், தற்போது நிராகரித்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பில் நேற்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினேன். இன்று கிடைத்த வணிக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் கடிதத்தில் எந்த காரணங்களையும் தெரியப்படுத்தாமல் தமிழகத்தின் அலங்கார ஊர்தி கலந்து கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பது அதிர்ச்சி மற்றும் வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி மறுக்கப்பட்டது. அது சென்னையில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதனை ஆதரித்த சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தன் ட்விட்டர் பக்கத்தில், “நமது வரலாற்றை நாம் கூறாமல் வேறு யார் கூறுவார்கள்? முதல்வர் அவர்களே சபாஷ்! 7.5 கோடி தமிழ் மக்கள் உங்களின் பின்னால்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |