Categories
உலக செய்திகள்

வாயில்லா ஜீவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி…. பிரபல நாட்டு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

தனது உரிமையாளரை விட்டு பிரிந்த குரங்கு குட்டி வனவிலங்கு பூங்காவில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்குவடார் நாட்டில் ஆனா பியட்ரிஸ் என்ற பெண் 18 வருடங்களுக்கு முன் ஒரு மாத குரங்கு குட்டியை வனத்திலிருந்து எடுத்து வந்து ஈஸ்ட்ரெலிட்டா  என பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோத செயல் எனக் கூறி அதிகாரிகள் அங்கிருந்த குரங்கு குட்டியை விலங்குகள் பூங்காவிற்கு எடுத்து சென்றனர்.

இதனையடுத்து பூங்காவில் இருந்த குரங்கு குட்டி ஒரு மாதத்திற்கும் மேல் தனது உரிமையாளரை விட்டு பிரிந்து இருந்ததால் அது சோகத்தில் இறந்து விட்டது. இது தொடர்பாக ஆனா பியட்ரிஸ் ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை விசாரித்த ஈக்குவடார் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது யாதெனில் “வனவிலங்கு பூங்காவில் வைத்ததன் மூலம் குரங்கின் உரிமை பறிக்கப்பட்டது உரிமை மீறல் தான் எனவும் அதே சமயத்தில் 18 ஆண்டுகளுக்கு முன் இந்த விலங்கை வனத்திலிருந்து அழைத்து வந்ததும் உரிமை மீறல் தான்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |