Categories
உலக செய்திகள்

57 பேர் உயிரிழந்த பெஷாவர் தாக்குதல்… முக்கிய குற்றவாளியை சுட்டுக்கொன்ற இராணுவம்…!!!

பெஷாவர் தாக்குதலின் முக்கியமான குற்றவாளியை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்வாவின் தலைநகரான பெஷாவரில் இருக்கும் ஒரு மசூதியில் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதியன்று ஒரு தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதில் 57 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் சமீப வருடங்களில் நடந்த மிகவும் மோசமான தீவிரவாத தாக்குதல் என்று கூறப்பட்டிருக்கிறது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்நிலையில் இத்தாக்குதலின் முக்கிய குற்றவாளியான ஹாசன் ஷா என்ற தீவிரவாதி கைபர் மாவட்டத்தில் மறைந்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி ராணுவ வீரர்கள் அங்கு சென்று தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு மோதல்  நடந்தது. கடைசியாக முக்கிய குற்றவாளியான ஹாசன் ஷா, மற்றும் அவரின் கூட்டாளி இருவரும் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |