பிரேசிலில் மலைக் குன்றிலிருந்து பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் உள்ள பரானா மாகாணத்தில் 53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது திடீரென்று அந்த பேருந்து மலைகுன்றிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளது. இது குறித்து மீட்புப்படையினருக்கும், காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.