பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதாச்சலம் நோக்கி கடலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று வந்துள்ளது. இதை செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது டிக்கெட் பரிசோதகர் உள்ளே ஏறி பயணிகளிடம் பயணச்சீட்டு இருக்கிறதா என சோதனை செய்துள்ளார்.
அப்போது மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பேருந்திலிருந்து இறங்கிய 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென கல்லை எடுத்து பேருந்தின் பின்புறம் வீசி தப்பி ஓடியுள்ளார். இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல் வீசியது யார், எதற்காக கல் வீசினார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.