தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 7ஆம் தேதியுடன்ஓர் ஆண்டு நிறைவடைந்ததை நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென சென்னை மாநகராட்சி பேருந்தில் ஏறி மகளிரிடம் திமுக ஆட்சி குறித்து கருத்துக்களைகேட்டுள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ” திரைப்படங்களில் எப்படி கதாநாயகர்கள் இருப்பார்களோ அதைப்போலவே ஸ்டாலினுக்கும் மேக்கப் போட்டு ஓராண்டு காலம் கழித்து விட்டது. மேலும் பேருந்தில் சென்ற அவர் டிக்கெட் எடுத்தாரா என்ற சந்தேகம் இருக்கிறது” என்று கூறியுள்ளார். இவரின் இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த கேள்விக்கு திமுகவினர் இணையதளங்களில் பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஆய்வு பணிக்காக பேருந்தில் செல்லும்போது முதல்வர் டிக்கெட் எடுக்க தேவை இல்லை. எம்எல்ஏக்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம். இது கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.