Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமையில்…. பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கோபி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

இதேபோல் மங்களகிரி பெருமாள் கோவில், அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில், கொடுமுடி மும்மூர்த்திகள் தளமான வீரநாராயண பெருமாள் கோவிலில், சென்னிமலை ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோவில், ஊஞ்சலூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், இஞ்சி பாளையம் கோனபெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Categories

Tech |