Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியை தவிர்த்து தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி!!

சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் அனைத்து ஊரடக பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் சலோன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் இரவு 7 மணி வரை சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, தடை செய்யப்பட்ட பகுதிகளில் சலூன் இயங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி உள்ள கடைகளில் ஏ.சியை பயன்படுத்த கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகுநிலையங்களில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கண்டிப்பாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும், பணியாளர்கள் அடிக்கடி சோப்பால் கைகழுவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து இதர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகுநிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரக பகுதிகளில் மட்டும் சலூன் கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிற பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க கோரியும் அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கில், கடைகளை திறப்பது தொடர்பாகவும், சலூன் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் பதில் தர அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது. இந்த நிலையில், இன்று காலை இந்த மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

Categories

Tech |