நான்காவது நாளாக பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் நான்காவது நாளாகவும் யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இந்த மாவட்டத்தில் ஏற்கனவே 2258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2236 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1 நபர் மட்டுமே மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து 253 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து வசிக்கும் இரண்டு பேர், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஒரு நபர் என மொத்தம் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4654 உயர்ந்துள்ளது. இதில் 49 பேர் உயிரிழந்தனர். இதுவரை இந்த மாவட்டத்தில் பாதித்த 4568 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனையடுத்து தற்போது 37 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 314 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது.