கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.ஒம்பத்கரே. இவர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க முடியாது என்று கூற முடியாது.
இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்றார். அதன்பிறகு ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு கட்டாயப்படுத்த கூடாது என்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி. அதற்கு வழக்கறிஞர் அது மனதாரரின் நிலைப்பாடு என்று கூறினார். இதனையடுத்து நீதிபதி மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மனுவை ஆதார் சட்ட திருத்தத்துக்கு எதிராக இணைக்கப்பட்ட மனுவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.