உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 150 மில்லியன் மக்கள் வீடு இல்லாமல் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகெங்கும் பல்வேறு மக்கள் சாலைகளில், நண்பர்கள் வீடு, தற்காலிகமான ஒரு இடத்தில் மற்றும் பாதுகாப்பற்ற தனியார் போர்டிங் குடியிருப்புகள் போன்ற இடங்களில் வசிக்கிறார்கள். இவ்வாறு, கனடா நாட்டில் 10,000 நபர்களுக்கு 10 பேர் குடியிருப்பின்றி வாழ்ந்து வருவதாக தெரியவந்திருக்கிறது.
அந்த வகையில், இந்த வருடத்தில் மட்டும், இரவு நேரத்தில் 25,000-த்திற்கும் அதிகமான மக்கள் கனடாவில் வீடின்றி பிற இடங்களில் வசிக்கிறார்கள். இவ்வாறான மக்கள் பல்வேறு காரணங்களுக்காக வீடு இல்லாமல் இருக்கிறார்கள். இதில் சுமார் 63% மக்கள், வாடகை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
மேலும், 36% மக்கள் சண்டை அல்லது துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். 10% மக்கள் போதை பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் வெளியில் வசிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.