உங்கள் உடலில் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் நுரையீரலில் கொரோனா பரவுகிறது என்று அர்த்தம்.
கொரோனா வைரஸ் பல்வேறு சிக்கலான தொடர்புகள் உடையது. உங்கள் நுரையீரலில் பரவ தொடங்கும் போது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது.கொரோனா ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது இந்த பிரச்சனைகள் ஏற்படாது. இந்த சிக்கலை தவிர்க்க சில எச்சரிக்கை அறிகுறிகளை பார்ப்போம்.
நிலையான இருமல்:
கொரோனா வைரஸ் உங்கள் மார்பில் அடைப்பை ஏற்படுத்தும். நிலையான இருமலை ஏற்படுத்தும். நீங்கள் வரண்ட இருமலை தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு நீடித்து வந்தால், நுரையீரல் நோய்த்தொற்றுகான அறிகுறிகள் ஆகும். இதற்கு உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மூச்சுத்திணறல்:
கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் நுழைந்து ஆக்சிஜனின் அளவு புளியை தடுக்கும். இதனால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆக்ஸிஜன் அளவை குறைப்பதால் அபாயகரமானதாக மாற வாய்ப்புள்ளது.
நெஞ்சுவலி:
நுரையீரலை பாதித்து பின்னர் சுவாசப் பாதையை கட்டுப்படுத்தும் பொழுது அது நேராக மார்பு வலியை உண்டாக்கும். நீங்கள் திடீரென்று இந்த அறிகுறியை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி கொரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது.