மொராக்கோவிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் பலர் கடல் வழியாக நீந்தி ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் வீடியோ வெளியாகியுள்ளது.
மொராக்கோ நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் பலர் தங்கள் உயிரை துட்சமாக கருதி மிகவும் போராடி கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்து வருகிறார்கள். ஸ்பெயினில் உள்ள Ceuta நகரில் அவர்கள் கரையேறுவதால், அங்கு எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் சுமார் 1500 க்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கடல் வழியாக நீந்தி வந்திருக்கின்றனர். இதில் நூற்றுக்கணக்கானவர்களை ஸ்பெயின் எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்து கிடங்குகளில் தங்க வைத்துள்ளனர். அவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் நடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
A migrant boy desperately uses plastic bottles to stay afloat.
The boy, a migrant attempting to reach the Spanish enclave Ceuta, tied plastic bottles to himself.
Read more here: https://t.co/F99pQ63xjr pic.twitter.com/Rm1mNXvgAj
— Sky News (@SkyNews) May 20, 2021
எனினும் சில இளைஞர்கள் பாதுகாப்பு படையினரிடம் மாட்டிக்கொள்ளாமல் ஸ்பெயினிற்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பெயின் அரசு, இவ்வாறு பிடிக்கப்பட்ட இளைஞர்களை மொராக்கோவிற்கு அனுப்புவதோடு, புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் நாட்டிற்குள் கடல் வழியாக நுழையாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மொராக்கோவை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் புலம்பெயர்ந்தவர்கள், ஸ்பெயின் பாதுகாப்பு படை எங்களை தாக்கியதாக கூறுகின்றனர்.