கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாய் பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். மேலும் அங்கு கனகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் கோவிலை இடித்து அகற்றி விட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் வரை கோஷங்கள் எழுப்பியவாறு பொதுமக்கள் ஊர்வலமாக சென்று புகார் மனு அளித்துள்ளனர்.