பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆதாரம் போன்ற கொரோனா தொடர்பான விதிமுறைகள், சர்வாதிகாரம் போன்றது மற்றும் மக்களை பாரபட்சமாக நடத்தும் செயல் என்று கூறி சுமார் இரண்டாயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
அதாவது பொது இடங்களில் மக்கள் செல்ல அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மக்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனவும் அதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியிருக்கிறார்கள். தலைநகர் பாரீஸ் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.