Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண வாங்க” நம்பி போன மூதாட்டிக்கு…. அல்வா கொடுத்த திருட்டு ஆசாமி…!!

திருட்டு ஆசாமி ஒருவர் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண வருமாறு கூறி அழைத்து சென்று மூதாட்டியிடம் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை லாயிட்ஸ் காலனி சேர்ந்த பாஜக பிரமுகர் பிரசாத்தின் தாய் ராவணம்மா. இவர் சம்பவத்தன்று மதியம் மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த வீட்டை காட்டி அங்கு குழந்தைக்கு நிகழ்ச்சி நடைபெறுவதால் உங்களைப் போன்ற பெரியவர்கள் வந்து குழந்தைக்கு ஆசிர்வாதம் வழங்கினால் குழந்தையின் வாழ்க்கை செல்வ செழிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டியும் அவருடன் சென்றுள்ளார்.

மூதாட்டியை அழைத்து சென்ற அவர் அங்குள்ள வீட்டில் அமர வைத்துவிட்டு செல்போன் பேசுவது போன்று மாடி மேலே ஏறி சென்று திரும்பி வந்த அவர் குழந்தையின் பெற்றோர் மிகவும் வசதியானவர்கள் என்பதால் ஆசீர்வாதம் வழங்க வரும் வயதானவர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்குவதாக கையில் அணிந்திருக்கும் மோதிரங்களை அளவுக்கா தரும்படி பகூறியுள்ளார். இதனால் கூட ஒரு மோதிரம் கிடைக்கும் என்ற ஆசையில் கையில் இருந்த மூன்று மோதிரங்களையும் கழட்டி மர்ம ஆசாமியிடம் மூதாட்டி கொடுத்துள்ளார்

இதையடுத்து வெகுநேரமாகியும் மோதிரம் திரும்பி வரவில்லை, ஆசாமியும் திரும்பி வரவில்லை நீண்ட நேரமாகியும் காத்திருந்த மூதாட்டிக்கு ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து காவல்துறையினர் விசாரித்து இதே பாணியில் பல முதியவர்களிடம் அந்த ஆசாமி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழிக்கு ஏற்ப யார் என்ன சொன்னாலும் நம்பி அவருடன் செல்வது ஆபத்து என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |