உக்ரைன் நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி ரயில் வழியாக போலந்து நாட்டின் எல்லை பகுதியை அடைந்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருவதால் அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். அதன்படி அந்நாட்டு மக்கள் தங்கள் உடமைகளை சுமந்து கொண்டு போலந்து நாட்டின் எல்லைப் பகுதியை அடைந்துள்ளனர்.
அங்கு எல்லை அதிகாரிகள், அவர்களை வழிநடத்திச் சென்று அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள். தங்கள் உறவினர்களை பார்த்தவுடன் அந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் வழிய கட்டியணைத்து அன்பை பரிமாறினர். அது காண்போரின் மனதை கலங்கச் செய்தது.